பொதுவாக சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட அரசு சான்றிதழ்களை பெறுவதற்கு விண்ணப்பித்து பால நாட்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம். இப்படியிருந்த நிலையில் தற்போது ஆன்லைன் வழியாக அரசின் சான்றிதழ்,  பட்டா மாறுதல்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இனி 16 நாள்களுக்கு மேல் காத்திருக்க தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முறைகேடுகள், தாமதம் நிகழ்வதை தடுக்கும் வகையில் தாலுகா வாரியாக துணை ஆட்சியர் நிலையில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர். சிறப்பு அதிகாரி தலைமையிலான குழு. உரிய நேரத்தில் ஆன்லைன் வழியான விண்ணப்பங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யும்.