2024 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மே 26ஆம் தேதி நாளை மோதுகின்றன. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் இறுதிப் போட்டியில் களம் காண்கின்றனர். அதாவது பேட் கம்மின்ஸை ஹைதராபாத் 20.50 கோடிக்கும், ஸ்டார்க்கை கேகேஆர் ரூ.24.75 கோடிக்கும் ஏலத்தில் வாங்கியது. இந்த இருவரும் ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.