லக்னோ அணியின் பயிற்சியாளர் ஐஸ்டீன் லாங்கர் அளித்துள்ள பேட்டியில், சிஎஸ்கே அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளில் நாங்கள் விளையாடினோம். குறிப்பாக லக்னோவிற்கு அவர்கள் விளையாட வந்தார்கள். உண்மையாகவே அந்த நாளில் 48,000 ரசிகர்கள் எம் எஸ் தோனியின் ஏழாவது நம்பர் ஜெர்சியோடு லக்னோவில் இருந்தார்கள்.

பின்னர் சென்னைக்கு விளையாட சென்றோம். அங்கேயும் 98 சதவீதம் அல்ல 100 சதவீதம் ரசிகர்கள் தோனிக்கு ஆதரவாக இருந்தார்கள். இந்தியாவில் இப்படி ஒரு வீரர் ஹீரோவாக கொண்டாடப்படுவதை என்னால் நம்ப முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.