2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய இரண்டு மாதங்களுக்கும் மேலாக ரசிகர்களை மகிழ்வித்து வரும் நிலையில் இன்றுடன் ஐபிஎல் தொடர் முடிவு பெறுகிறது. பல திருப்பங்களுக்கு பிறகு கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் இன்று இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன.

இந்த தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகள் லீக் சுற்றிலேயே வெளியேறியது பெரும் ஏமாற்றத்தை அளித்தாலும் தொடரை வெல்ல தகுதியான அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடுவதாக ரசிகர்கள் திருப்தி தெரிவிக்கின்றனர். 2024 ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார் என்றும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.