சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பெமேதரா மாவட்டத்தில் இன்று துப்பாக்கி தூள் தயாரிக்கும் ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பலரும் படுகாயம் அடைந்ததாக கூறப்படும் நிலையில் சம்பவ இடத்திலிருந்து பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

வெடிமருந்து தொழிற்சாலை வெடி விபத்தால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. விபத்து நடந்த இடத்தில் ஏராளமானோர் திரண்டு உள்ளனர். இந்த விபத்து காரணமாக சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை புகைமூட்டமாக மாறியுள்ளது.