சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி, தனது தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். இந்த முறை கட்டாயம் 400 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று கூறிவரும் பிரதமர் என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மா தான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பு இல்லை என பிரதமர் மோடி கூறினார். இந்த உலகில் ஏதோ ஒரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்துள்ளார் என்று அவர் கூறினார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியை நாம் இனி மன்னர் என கூற முடியாது, அவர் தெய்வக் குழந்தையாகி விட்டார் என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். விசிக விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், பிரதமரால் நாட்டுக்கு ஏதும் துன்பம் ஏற்பட்டால் அவரை திட்ட முடியாது. தெய்வம் மக்களை சோதிக்கிறது என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.