தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 900 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரியவந்துள்ளது. பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு காரணமாக இந்த பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை கூறுகிறது. இந்த நிலையில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பாதிக்கப்படுவதால் உடனே இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.