ஜல்லிக்கட்டு போட்டியில் ஜாதி பெயரை குறிப்பிட க்கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அவிழ்க்கும் போது ஜாதி பெயரை குறிப்பிடக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. காளையின் உரிமையாளர் பெயரோடு ஜாதியின் பெயர் குறிப்பிட்டு காளைகளை அவிழ்க்க கூடாது. தீண்டாமை உறுதிமொழி எடுப்பது குறித்து மனுதாரரின் கோரிக்கையை பரிசீலனை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கும் முன் தீண்டாமை உறுதிமொழி ஏற்பது குறித்து பரிசீலனை செய்ய அரசுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் போது ஜாதி பெயர்களை பயன்படுத்துவதால் ஏராளமான பிரச்சனைகள் வருகின்றன என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அதாவது காளைகள் அவிழ்க்கும் போது உரிமையாளர் பெயரோடு ஜாதி பெயரை குறிப்பிடக் கூடாது என்று சென்னை ஐகோர்ட் உத்தரவை பின்பற்ற கோரி வழக்கு தொடரப்பட்டது. உரிமையாளர் பெயரோடு ஜாதியின் பெயர் கூறி ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்க்ககூடாது என்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது..