தமிழகத்தில் கடந்த மாதம் முதலில் வெள்ள பாதிப்பானது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இப்போது மீண்டும் தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள அதிக மழை காரணமாக வைகை அணையில் 69.75 அடி நீர் இருக்கிறது.

அணையின் மொத்த 70 அடி கொள்ளளவு நீர் விரைவில் வெளியேற்றப்படும் என்றும் இதன் காரணமாக தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்ட அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணைக்கு வரும் முழு நீரும்  வெளியேற்றப்படுவதால் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வேண்டும் , ஆற்றை கடப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.