மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, திரு ஸ்டாலின் அவர்களே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க வேண்டும் என்று ஒருபோதும் என்ன வேண்டாம். உங்க கட்சியை காப்பாத்துங்க. அது மட்டும் இல்லை,  டாஸ்மாக்கில் பெரிய ஊழல். டாஸ்மாக் கடைக்கு சென்று ஏழை எளியோர் மதுபானம் வாங்கினால் ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய்…. ஒரு நாளைக்கு ஒரு கோடி பாட்டில் விற்கின்றது. ஒரு நாளைக்கு பத்து கோடி ஊழல் செய்த அரசாங்கம் திமுக அரசாங்கம், மறுக்க முடியுமா ? தமிழ்நாட்டில் 3600 பாரில் முறைகேடு நடந்து கொண்டிருக்கிறது.

இன்றைக்கு காவல்துறை அதிகாரிகளை ஆங்காங்கே சென்று முறைகேடாக நடந்த பார்களுக்கு  சீல் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படின்னா….  அரசாங்கத்துக்கும் , காவல்துறைக்கும் தெரிந்துதானே,  இந்த முறைகேடான பார்கள் நடந்து கொண்டிருந்தது.  முறைகேடாக  நடந்து கொண்டிருந்த பாரிலே வருகின்ற வருமானம் பல்லாயிரக்கணக்கான கோடி மேலிடத்திற்கு போகிறது என்கிறார்கள். மேலிடம் என்றால் யார் ? மேலிடம் ஸ்டாலின்.

ஆகவே  முறைகேடாக நடைபெறுகின்ற பாரிலே… உண்மையான கடையில் வாங்கிய சரக்கை அந்த பாரில் சென்று  மது அருந்துவதில்லை.  முறைகேடாக நடைபெறுகின்ற பாரிலே கலால் வரி செலுத்தாமல் நேரடியாக  மதுபான கடையில் இருந்து நேரடியாக பாருக்கு சென்று,  ஒரு பாட்டிலுக்கு 100 ரூபாய்… அதிலே ஊழல் செய்திருக்கிறார்கள்.

பல்லாயிரக்கணக்கான கோடி ஊழல். ஆனால் இதையெல்லாம் வெட்ட வெளிச்சத்திற்கு விரைவாக வரும். அதில் சிக்கிய ஒரு அமைச்சர் கம்பி எண்ணிட்டு இருக்கார்.  அண்ணா திமுக கழக நிர்வாகிகள், தொண்டர்கள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள்  மீது பொய் வழக்குகள் போடுகிறீர்கள். முன்னாள் அமைச்சர் மீது பொய் வழக்கு போடுகிறீர்கள். அத்தனையும் நீதிமன்றத்திற்கு சென்று சட்டரீதியாக வெல்வோம் என தெரிவித்தார்.