ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் பயணிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த ரயில்கள் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே மீட்டர் கேஜ் பாதையில் 15 கிலோ மீட்டர் வேகத்துக்கு குறைவாக எக்ஸ் கிளாஸ் என்று அழைக்கப்படும் இன்ஜின்கள் மூலமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது போன்ற மலை ரயிலில் பயணம் செய்பவர்கள் இயற்கை காட்சிகளை கண் குளிர ரசித்துக் கொண்டே செல்ல முடியும். இது டீசல், பர்னஸ் ஆயில் போன்ற எரிபொருளோடு உதவியோடு தான் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசு சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் எட்டு பகுதிகளில் உள்ள 35 ரயில்களை ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கான பணிகள் விரைவில் முடிவடைந்து மேட்டுப்பாளையம் – குன்னூர் இடைய ஹைட்ரஜன் என்ஜின் கொண்டு மலை ரயில்கள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.