தமிழகத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுகை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர், குமரி, நெல்லை, தென்காசி மற்றும் ராமநாதபுரத்தில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.