
நீட் விலக்கு கேட்டு திமுக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய திராவிட கழக துணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி, 21 ஆண்டு காலமாக எந்த முதல்வராலும் ஒழிக்க முடியாத… நுழைவு தேர்வை ஒற்றை கையெழுத்தால் ஒழித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்… கலைஞர் போட்ட கையெழுத்து என்பது நுழைவு தேர்வுக்கானது அல்ல. ஆண்டாண்டு காலமாக ஆதிக்க உணர்விலிருந்த அந்த திமிறை அடக்கி, அதற்கு புள்ளி வைத்தது தான் கலைஞருடைய நுழைவு தேர்வுக்கு எதிரான கையெழுத்து.
இந்த தலைவர்களுடைய பாரம்பரியத்தில் வந்த நாம்…. மக்கள் இயக்கமாக இதை ஏன் மாற்ற வேண்டும் என்று சொன்னால் ? பெரியார் ஒரு போராட்டம் நடத்துவதற்கு முன்னாடி பிரச்சாரம் பண்ணுவார். வீதி வீதியாக போவார்… இதுதான் பிரச்சனை என்று சொல்லுவார்… இதுதான் பிரச்சனை என்று சொல்லிவிட்டு ஐயா என்ன சொல்லுவார் என்றால் ?
ஜாதி பார்க்காதே, மதம் பார்க்காதே, அரசியல் பார்க்காதே, இந்த பிரச்சனை உங்க பிள்ளைக்கு என்று புரிந்து கொண்டு, போராட்டத்துக்கு வா என்று சொல்வார்கள். இன்னைக்கு வந்திருக்கக்கூடிய மாணவர்கள் ஒவ்வொருத்தரும் உங்கள் வீட்டிற்கு சென்று நீங்கள் போடக்கூடிய கையெழுத்து மட்டும் அல்லாமல், உங்கள் பெற்றோரிடத்தில்… உங்கள் நண்பர்களிடத்தில்… உங்களுக்கு தெரிந்தவர்கள் இடத்தில் இந்த கையெழுத்து பெற வேண்டும். அதை பெறுகிற பொழுது சொல்லி கையெழுத்து வாங்க வேண்டும் என தெரிவித்தார்.