நெப்போலியனுக்கு ஏற்பட்ட கதியை மறந்து விட வேண்டாம் என பிரான்ஸ் அதிபருக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்கரான் பேசிய போது உக்ரைனால் ரஷ்யா தோற்கடிக்கப்பட வேண்டும் என தான் விரும்புவதாகவும் அதே வேலை அங்கு புதினுக்கு மாற்றாக வேறொரு தலைவரை விரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

அதற்கு பதில் அளித்த ரஷ்ய வெளியுறவு செய்தி தொடர்பாளர் மரியா ஜக்கோராவா பிரான்ஸ் அதிபர் நெப்போலியனுக்கு ஏற்பட்ட கதியை பிரான்ஸ் மறந்துவிடக்கூடாது என எச்சரிக்கை விடுத்தார்.