துருக்கியில் 3600 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம் என இந்திய லெப்டினன்ட் கர்னல் ஆதர்ஷ் ஷர்மா தெரிவித்துள்ளார். துருக்கி நிலநடுக்கம் உலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இந்தியா சார்பில் மருத்துவ குழு அடங்கிய ராணுவ குழுவினர் அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். துருக்கியில் மீட்பு பணி நிறைவடைந்த நிலையில் ராணுவ குழுவினர் சொந்த நாடு திரும்பி உள்ளனர்.

இந்த நிலையில் துருக்கியில் 3600 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம் என இந்திய லெப்டினன்ட் கர்னல் ஆதர்ஷ் சர்மா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த பேருடரை எதிர்கொள்ள தங்களை அனுப்பி வைக்க உடனடியாக அரசாங்கம் எடுத்த முடிவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் துருக்கியில் சிறிய மற்றும் பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகள் நடைபெற்றது எனவும் தெரிவித்துள்ளார்.