துருக்கியில் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் சிக்கிய உடல்களை மீட்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால் இந்தியாவில் இருந்து சென்ற மீட்பு படையினர் நாடு திரும்பி விட்டனர். துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 14 நாட்கள் கடந்து விட்டன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 46 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி துருக்கி மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு வாரங்கள் ஆகிவிட்டதால் இறந்தவர்களின் உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியை நிறுத்த துருக்கி அரசு முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவில் இருந்து துருக்கி சென்ற மீட்பு படையினர் 151 பேர் நாடு திரும்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.