மகாராஷ்டிராவின் நாந்தெட் (Nanded) நகரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிய மருத்துவ அதிகாரி ஒருவரை, ‘முறைகேடாகச் சீண்டியதாக’ (Molestation Allegations) குற்றம் சாட்டி, அப்பெண்ணின் உறவினர்கள் கடுமையாகத் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து இதுவரை காவல்துறையில் அதிகாரப்பூர்வப் புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
நாந்தெட் நகரத்தின் கௌதா (Kautha) பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில், மருத்துவ அதிகாரி டாக்டர். பாலபிரசாத் குண்டூர்க்கர் (Dr Balaprasad Kunturkar) என்பவர் தனது அலுவலக அறையில் அமர்ந்திருந்தபோது, ஒரு பெண்ணும் அவரது உறவினர்களும் அங்கு வந்துள்ளனர்.
அப்போது, அந்தப் பெண் டாக்டர் குண்டூர்க்கர் மீது சீண்டல் குற்றச்சாட்டை வைக்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், டாக்டர் குண்டூர்க்கரைத் தாக்கி கடுமையாக அடித்துள்ளனர். இந்தச் சம்பவத்தை யாரோ வீடியோ எடுத்துச் சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளதால், இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
