சத்தீஸ்கரின் தலைநகர் ராய்ப்பூரில் (Raipur), BLO (Booth Level Officer) அதிகாரியாகப் பணியாற்றும் ஒருப் பெண்ணைத் தாக்கி, அவரது சேலையை இழுத்து அவதூறாகப் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘SIR’ (Voter Registration) படிவம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த ஒரு பெண், இந்தப் பெண் BLO-வுடன் தகராறில் ஈடுபட்டு, அவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

ராய்ப்பூரின் காளி மாதா வார்டில் (Kali Mata Ward) நடந்த இந்தச் சம்பவத்தின் போது, அந்தப் பெண் BLO-வை அடிக்கத் தொடங்கியதோடு, அங்கிருந்த மக்கள் சிலர் அதைப் வீடியோ எடுத்தபோது, அவர்களையும் அடிக்க முயன்றுள்ளார்.

படிவம் வீட்டிற்குக் கொண்டு வந்துத் தர தாமதம் ஆனதாலேயே இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து இதுவரை காவல்துறையில் எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், BLO ஊழியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்றச் சம்பவங்களைத் தடுக்கத் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.