
தற்போது சினிமாவில் புதிய நடிகையாக அறிமுகமாகி இருப்பவர் சௌந்தர்யா சர்மா. இவர் பல் மருத்துவராக இருந்து தற்போது நடிகையாக மாறியுள்ளார். பிக் பாஸ் 16-ல் இவர் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில் இவர் தற்போது ‘ஹவுஸ்புல் 5’ என்ற நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார்.
இந்த படத்தில் லூசி என்ற கேரக்டரில் இவர் நடித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சௌந்தர்யா சர்மாவுக்கு, அக்ஷய் குமார் தனக்கு வழங்கிய முக்கியமான அட்வைஸை பற்றி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருங்கள். அது உங்களுக்கு பயன் அளிக்கும். பேசுபவராக இருப்பதைவிட நன்றாக கேட்பவராக இருங்கள் என்று அவர் கூறியுள்ளார்.