முன்பு காலங்களில் மக்கள் நோயுற்றால் மருந்துகள் இல்லாமல் கூடச் சமாளித்தனர். ஆனால், இன்றைய காலகட்டத்தில் மாறிப்போன உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக மக்கள் எளிதில் நோய்வாய்ப்படுவதால், மாத்திரைகள் மற்றும் மருந்துகள் இல்லையென்றால் அவர்கள் குணமடைவது சிரமமாகிவிட்டது. நாம் தினமும் பயன்படுத்தும் இந்த மருந்துகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது.
இந்நிலையில், மாத்திரைகள் தயாரிக்கப்படும் தொழிற்சாலையின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு பெரிய இயந்திரத்தில் இருந்து மாத்திரைகள் உருவாகி ஒரு கூடையில் விழுவதையும், பிறகு அவை வேறொரு இயந்திரத்தில் இடப்பட்டு, அதனுடன் பலவிதமான இரசாயனங்கள் கலக்கப்படுவதையும் காணலாம்.
View this post on Instagram
இறுதியாக, மாத்திரைகள் முழுவதுமாகத் தயாரானதும், அவை ராப்பர் போன்ற உறைகளில் நிரப்பப்பட்டு, மீண்டும் இயந்திரங்களின் உதவியுடன் பேக்கிங் செய்யப்படுகின்றன. இந்த வீடியோ, மாத்திரைகள் தயாரிக்கப்படும் செயல்முறை, அதன் கலவை மற்றும் இறுதி பேக்கேஜிங் வரை உள்ள உற்பத்திச் சங்கிலி குறித்துப் பார்வையாளர்களுக்கு ஒரு தெளிவான காட்சியை அளிக்கிறது.
‘@smartest.worker’ என்ற இன்ஸ்டாகிராம் ஐடியில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 8 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். வீடியோவைப் பார்த்த பலர், “தாங்கள் முதல்முறையாக மருந்துகள் தயாரிக்கப்படுவதைப் பார்க்கிறோம்” என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு பயனர், மருந்துத் தொழிற்சாலையில் உள்ள ஊழியர்கள் ஏன் ஒரே மாதிரியான சீருடையை அணியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
