தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர் அஜித், விஜய், ரஜினிகாந்த், சூர்யா, தனுஷ் ஆகியோர்களின் வீடுகளின் விலை பற்றி தற்போது பார்க்கலாம். அதோடு தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ராம்சரண், பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோரின் வீட்டின் மதிப்பையும் பார்க்கலாம். இவர்கள் ஒரு படத்திற்கு பல கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறும் நிலையில் பல விலை உயர்ந்த கார்கள், வீடுகள் என ஆடம்பர பொருட்களை வைத்திருக்கிறார்கள்.

அண்மையில் இவர்களின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளிவந்த நிலையில் தற்போது இவர்களின் வீடுகள் மதிப்பு குறித்த தகவலும் வெளிவந்துள்ளது. அதன்படி நடிகர் விஜயின் வீட்டின் மதிப்பு 35 கோடி ஆகும். அதன் பிறகு நடிகர் அஜித்தின் வீட்டின் மதிப்பு 15 கோடியாகவும், ரஜினியின் வீட்டின் மதிப்பு 35 கோடியாகவும், நடிகர் தனுஷின் வீட்டின் மதிப்பு 150 கோடி ஆகவும், நடிகர் சூர்யாவின் வீட்டின் மதிப்பு 70 கோடியாகவும், நடிகர் ராம்சரணின் வீட்டின் மதிப்பு 30 கோடியாகவும் இருக்கிறது. மேலும் நடிகர் பிரபாஸின் வீட்டின் மதிப்பு 60 கோடியாகவும், நடிகர் அல்லு அர்ஜுனின் வீட்டின் மதிப்பு 100 கோடியாகவும் இருக்கிறது.