பிரபல நடிகை அடா ஷர்மா நடிப்பில் தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த படத்தை விபுல்ஷா தயாரிக்க, சுதிப்டோ சென் இயக்கி இருந்தார். இப்படம் 32 ஆயிரம் இந்து மத பெண்களை மூளை சலவை செய்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றி பயங்கரவாத அமைப்பில் ஈடுபடுவது போன்று அமைந்திருந்தது. இந்த படத்திற்கு நாடும் முழுவதும் பல அரசியல் கட்சி தலைவர்களும் இஸ்லாம் அமைப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வந்தார்கள். இருப்பினும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கேரளா ஸ்டோரி திரைப்படம் 100 கோடி வசூல் சாதனை புரிந்துள்ளது.
தி கேரளா ஸ்டோரி பட குழுவுக்கு அடிக்கடி மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் அப்படத்தின் நாயகி அடா சர்மா திடீரென விபத்தில் சிக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் விபத்து குறித்து நடிகை அடா சர்மா விளக்கம் கொடுத்துள்ளார். அவர் எனக்கு பெரிதாக காயம் எதுவும் ஏற்படவில்லை. நானும் எங்கள் படக்குழுவினரும் நன்றாக இருக்கிறோம் என்று கூறி பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.