தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தற்போது கோயம்புத்தூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் நேரடி கள ஆய்வு பணியை மேற்கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது, கடந்த நவம்பர் 14, 15 ஆம் தேதிகளில் அரியலூர், பெரம்பலூர் பகுதியில் நேரடி கள ஆய்வு பணியை தொடங்கினேன். இந்த கள ஆய்வுப் பணியில் இரண்டு மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி, கழக சகோதரர்களிடையே ஆலோசனை நடத்தியது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கள ஆய்வுப் பணியை “ரோடு ஷோ” என்பர் ஷோ என்றால் காட்சி எனக்கு பொதுமக்கள் காட்சியும் அல்ல காட்சி பொருளும் அல்ல.
மக்கள் எனக்கு கொடுக்கும் மிகப்பெரிய வரவேற்பு எங்களது ஆட்சிக்கு கிடைக்கும் மிகப்பெரிய மரியாதையாக அதை நான் கருதுகிறேன். நான் கள ஆய்வுப் பணியில் அரியலூரில் செல்லும் வழியில் மக்கள் ஒன்றுகூடி ஆரவாரம் செய்தனர். மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் “நாம்தான் வெற்றி பெறுவோம்” என்றும் “நிச்சயம் 200 ஜெயிப்போம் “என வாக்குறுதி அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து நவம்பர் மாதம் 28, 29ஆம் தேதி களில் விழுப்புரம் மாவட்டத்திற்கு நேரடி கள ஆய்வுப் பணியை செய்ய போகிறேன். இதேபோன்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்ல முடிவெடுத்துள்ளேன். என தமிழக முதல்வர் கூறினார்
