செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பூ,   என்னை டிஎம்கேவினர் ரொம்ப கேவலமான வார்த்தைகள் திட்டினார்கள்… பிறகு பயந்துட்டு அவுங்களே  டெலிட் பண்ணிட்டாங்க. நான்  டெலிட் பண்ணுவதில்லை. நான் என்ன பேசி இருக்கேன்னு எனக்கு தெரியும். அதனால அது அப்படியே இருக்கு.. சத்தியமாக சொல்றேன்.. என்னால அந்த பாஷையில் பேச முடியாது.. நான் எங்கிருந்தாலும்,  மக்களிடம் எப்படி பழகுறேன் ? எப்படி பேசுறேன் ? என அவுங்களுக்கு தெரியும்.

இத்தனை வருடம் சினிமாவில் யாராவது குஷ்பு கெட்ட வார்த்தைகளை திட்டினார்கள் என்று அதுவும் சரித்திரமே இருக்காது… பசங்க கிட்ட, வீட்டுலயும் கெட்டவார்தையில் திட்டுறது கிடையாது. எனக்கு அந்த பழக்கம் கிடையாது…. கெட்ட வார்த்தை பல பயன்படுத்துற பழக்கம் எனக்கு கிடையாது. ஆனால் நான் பேசும்போது ஒரு சர்க்காஸ்டிக்கா உங்களுக்கு சொன்னேன்.

அவங்க குரல் கொடுக்காமல் நடுவில் வந்துட்டு நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் சொல்லிட்டு ஒருத்தர் காமெடி பண்ணிட்டு இருந்தா எனக்கு சிரிப்பு தான் வரும்.  வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்து இருக்காங்க. ரொம்ப சந்தோசம்… போலீஸ்காரங்களுக்கும் நன்றி சொல்லணும்… நான் நேத்து ஊர்ல இல்ல… என் பசங்க… என் மாமியார்… என் தாயார் அவங்க மட்டும் வீட்ல இருந்தாங்க….  உண்மையிலேயே தமிழ்நாடு போலீசுக்கு குறிப்பாக….  எங்களுடைய பட்டினம் பாக்கம் போலீசுக்கு ரொம்ப நன்றி சொல்லணும்.  காலையில் இருந்து மதியம் வரைக்கும் என் வீட்டு வாசலிலே பாதுகாப்பா இருந்தாங்க என தெரிவித்தார்.