தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 6029 அரசு பள்ளிகளின் மிஷன் இயற்கை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் இந்த திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் 3,700 க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றன. இதில் 3000 பள்ளிகளில் பசுமை அமைச்சரவைகள் அமைக்கப்பட்டது. இதன் மூலம் அதில் உள்ள பள்ளி மாணவர்கள், வீடுகள் மற்றும் சமூக சுற்றுச்சூழலை சீராக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டனர்.

அதில் பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்ட நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் மிஷன் இயற்கை சுற்றுச்சூழல் திட்டத்தை உயர் தொழில்நுட்ப ஆய்வக வசதி கொண்ட சுமார் 6029 அரசு பள்ளிகளில் செயல்படுத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் பங்கேற்பதற்கு உயர்தொளி நுட்ப ஆய்வக வசதி உள்ள தங்களுடைய பள்ளிகளின் பெயர்களை சுற்றுச்சூழல் ஆசிரியர்களின் பெயர்களுடன் இணையதள முகவரியில் டிசம்பர் 5ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.