திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  நம்மை பயமுறுத்த வேண்டும் என்று…. நம்முடைய அமைச்சர்கள் தொடர்ந்து….. நம்மளும் அதிமுககாரன் மாதிரி பயப்படுவோம் என்று நினைத்து விட்டார்கள்…. அதிமுக என்றால்  இப்போ அண்ணா திமுக கிடையாது. அதை நீங்கள் உணர வேண்டும். அதிமுககாரனுக்கு தேவை  இரண்டே இரண்டு கால் தான்.

மறைந்த முதலமைச்சர் அம்மா ஜெயலலிதா அம்மையார் இருந்தவரை, அந்த அம்மையாரின் காலில் விழுந்து கிடந்தார்கள்.  திரு ஓபிஎஸ் முதலமைச்சரான உடனே அவர்கள் காலில் விழுந்து கிடந்தார்கள்…  பிறகு அவர் காலை வாரிவிட்டார்கள். அதற்கு பிறகு அம்மையாருடைய நெருங்கிய தோழி….  சசிகலா அம்மையாரின்  காலில் விழுந்து கிடந்தார்கள். முதலமைச்சரானதே  அந்த அம்மாவின் காலை புடிச்சு தான்.

முதலமைச்சர் ஆனா பிறகு அந்த அம்மாவின் காலையும் வாரி விட்டார். அதன் பிறகு  அமித் ஷா, திரு மோடி இவர்கள் காலை  பிடித்தார்கள். இப்போ ஆட்டுதாடி காலையும் புடிச்சி இருக்காங்க. ஆட்டு தாடி என்று நான் யாரை சொல்லுகிறேன் என்று உங்களுக்கே தெரியும் என ஆளுநர் ஆர்.என் ரவியையும் உதயநிதி சீண்டி உள்ளார்.