தென் மாவட்டங்களில் சாதி அடக்குமுறை சங்கவங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி,  எந்தெந்த பகுதியில இதுபோல வன்முறை நடக்கிறது. அங்க  அந்த வன்முறை கும்பல்கள் சுதந்திரமா ஜாலியா வெட்டி போட்டு,  எப்படி போறாங்க ? வெட்டிட்டு பேட்டி எப்படி கொடுக்கிறான்?  நாங்க விளையாட்டுக்காக வெட்டணும் கொடுக்கிறாங்க.

இந்த நாட்டுல விளையாட்டுக்காக ஒரு மனுசனோட உயிரை எடுக்கிறது எவ்வளவு மோசமான செயல். அப்போ அவன் மனசுல துளியும் கூட  பயமில்லை…   மணி என்பவர் கொலை செய்ததை பற்றி அவுங்க மனசு உறுத்தவில்லை.  அவர்களுக்கு அச்சம் உருவாகல…  வழக்கமா ஒரு தப்பு பன்றவன் தான் பயப்படணும். ஆனால்  தப்பு செய்யாதவங்க பயப்பட்டு,

இன்னைக்கு மனக்கறையில் இருக்கக்கூடிய மக்கள் தங்கள் ஊரை காலி பண்ணிட்டு,  வெளியூர்ல குடியேறும் அளவுக்கு  நிலைமைக்கு உருவாகி இருக்கு.  ஜனநாயக நாட்டில் இது நல்லதா ?  அப்படிங்கறது மட்டும்தான் பாக்கணும். எல்லாருடைய  மனசாற்றிக்காக வைக்கின்றேன்.  இது போன்ற சம்பவங்கள் இப்படி வந்து நடக்கிறது  நல்லதா ?  ரேஷன் கடையில போயி அவங்களால பொருள் வாங்க முடியவில்லை.

காலைல 8 மணிக்கு போனால் நாலு மணி வரையிலும் இந்தப் பெண்கள் நிக்கணும். அவங்க இடிச்சு தள்றாங்க… அவங்கள அவமானப் படுத்துறாங்க. அஞ்சு நாள் வேலை செஞ்சா,  ரெண்டு நாள் கூலி கொடுக்குறாங்க…. மூன்று நாள் கூலி கொடுக்கிறது கிடையாது. வாய்க்காலில் குளிக்கிற போது அவங்களுக்கு ஒரு படித்தரை இருக்குது…  அவுங்களுக்கு உண்டான படித்தரையை விட்டுவிட்டு இந்த படித்தராயில் குளிக்கிறாங்க… துணி வைக்க விடுவதில்லை.ஆடு மாடுகளை விட்டு அவங்களுடைய விவசாய பூமிகளுக்கு தொல்லை பண்றாங்க. இது மாதிரி சொல்ல முடியாத துயரங்கள்…. இன்னைக்கும் மனக்கரை டீக்கடையில உள்ள போயி உக்காரதுக்கு விடுவதில்லை.

இது போன்ற பல மனித உரிமை மீறல்கள் நம்முடைய திருநெல்வேலியில் இருந்து பத்தாவது கிலோ மீட்டருக்கு உள்ள இருக்கக்கூடிய ஒரு கிராமத்தில் நடக்கின்றது. மன்னகரை, அதை சுற்றி உள்ள வெள்ளூர் இது மாதிரி ஊரில் நடக்குது. ஒரு இடத்துல குற்றம் பண்ணுறவன்….  அந்த ஊர்ல போய் அடைக்கலம் ஆயிடுறான்…  அவங்களும் அடைக்கலம் கொடுக்குறாங்க என தெரிவித்தார்.