SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  கட்சி பற்றி இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகிறார். எடப்பாடி அடிமை. நாங்கள் எந்த கட்சிக்கும் அடிமை இல்லை.  நாங்களும் யாரையும் அடிமைப்படுத்துவது கிடையாது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சுதந்திரமாக செயல்படுகின்ற கட்சி. ஒரு சாதாரணமாக தொண்டன் கூட உயர்ந்த நிலைக்கு வர முடியும்.

எஸ்டிபிஐ கட்சி எப்படி இருக்கிறதோ அதைப்போல அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காக பாடுபடுகின்ற கட்சி. மதத்திற்கும்,  ஜாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி. அந்தந்த மதம் அவர்களுக்கு புனிதமானது. அதைத்தான் எங்களுடைய தலைவர்கள் வழிகாட்டி இருக்கின்றார்கள்.  அந்த வழியில் தான் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இன்றைக்கு ஆட்சிகாலர்கள் எப்படியாவது ஆட்சி பிடிக்க வேண்டும் என்பதிலே தான் குறிக்கோளாக இருக்கிறார்கள். மத்தியிலே ஆட்சி அதிகாரம் வரவேண்டும் என்பதற்காக ஒரு கூட்டணி அமைத்து இருக்கிறார்கள். ஆனால் மக்களைப் பற்றி கவலை இல்லை. கோடி கோடியாக கொள்ளையடித்த பணத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மத்தியில் ஆட்சி அதிகாரம் குடும்ப உறுப்பினருக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் கூட்டணி வைக்கிறார்கள்.

மக்களைப் பற்றி கவலை இல்லை. ஏன் சுமார் 15 ஆண்டுகாலம் மத்தியிலே ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்களே…. இந்த சிறுபான்மை மக்களுக்கு என்ன செய்தார்கள் ? ஏதாவது செய்தார்களா? மத்தியிலே ஆட்சி அதிகாரம்…. மாநிலத்திலே ஆட்சி அதிகாரம்….  அப்பொழுது எல்லாம் மக்கள் சிறுபான்மை மக்கள் கண்ணுக்கு தெரியவில்லை.  ஆனால் தேர்தல் வந்துவிட்டால் போதும், அழகாக பேசுவார்கள்.  கவர்ச்சிகரமாக பேசுவார்கள்.  ஏதோ ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றுகிறேன் என்று சொல்லுவார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டு மக்களையும் மறந்து விடுவார்கள்.  வீட்டு மக்களை தான் பார்ப்பார்கள். அது தான் திமுகவின் கொள்கை என தெரிவித்தார்.