
செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், இன்றைக்கு தமிழகத்தில் இருக்கக்கூடிய அத்தனை மந்திரிகளும் ஊழல் மந்திரிகளாக இருக்கிறார்கள்…. இந்த ஊழல் குற்றச்சாட்டை அண்ணாமலை மட்டுமே வெளியிடவில்லை…. அவர் டிஎம்கே பைல்ஸை வெளியிட்டார்… ஆனால் இந்த ஊழல் குற்றச்சாட்டை ஸ்டாலினுடைய நிதி அமைச்சர் பிடி.ராஜன் அவருடைய பேரன் தியாகராஜன் அவருடைய டெலிபோன் உரையாடலிலே வெளிப்படுத்தியுள்ளார்.
முப்பதாயிரம் கோடி ரூபாய் ஒரு குடும்பம் மட்டுமே சம்பாதித்து இருக்கிறது. அது உண்மை இல்லை என்று அவர் மறுக்கலாம். ஆனால் இந்த குற்றச்சாட்டை சொன்னது யாரு ? அவங்க மந்திரிதான்…. இப்போ நம்முடைய மூத்த அமைச்சர் துரைமுருகன் மேல குற்றச்சாட்டு வந்திருக்கு… மணல் கொள்ளை….. ட்ரோன் மூலமாகவும்…. நம்முடைய அறிவியல் மூலமாகவும்… எத்தனை சட்ட விரோதமாக மணல்கள் அல்லப்பட்டிருக்கிறது என்பது குடியாத்தம் குமரனே பேசியிருக்கிறார்…. அவர் திமுககாரர் தான், அவர்களே சொல்றாங்க….
எல்லா மந்திரிகளுமே ஊழல் செய்து பல கோடி ரூபாய்களை பதுக்கி வைத்திருக்கிறார்கள்… இப்போ அமலாக்க துறையின் ரெய்டின் போது நீங்க பார்க்கலாம்….. பிண அறையில் எல்லாம் பணம் பதுக்கி வச்சிருக்காங்க. திமுக மந்திரிகள் அத்தனை பேரும் மீதும் சொத்து குவிப்பு வழக்கு, மோசடி வழக்கு, ஊழல் வழக்கு… ஒரு மந்திரி ஜெயில்லவ இருக்காரு…. உச்ச நீதிமன்றத்தில் அவருக்கு இப்போது ஜாமீன் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது.