தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறையை அரசு அறிவித்துள்ளது. அதன்படி பொங்கல், தைப்பூசம், குடியரசு தினம், ரம்ஜான், தமிழ் புத்தாண்டு, மே தினம், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி ,காந்தி ஜெயந்தி, விஜயதசமி , தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட 12 பண்டிகை நாட்களில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர வெள்ளிக்கிழமை வார விடுமுறை நாட்களும் வருகின்றன.