பொதுவாகவே தொலைக்காட்சிகளில் அனைத்து நாட்களிலும் சீரியல்கள் தான் ஒளிபரப்பாகி வருகின்றன. ஆனால் ஏதாவது ஒரு ஸ்பெஷல் தினத்தன்று புது புது படங்கள் ஒளிபரப்பு செய்யப்படும். அப்படி வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தொலைக்காட்சிகளிலும் புது படங்களை ஒளிபரப்ப உள்ளன. இந்த வருடம் தீபாவளிக்கு ஏராளமான புது படங்களை சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி மற்றும் கலைஞர் டிவி ஆகியவை போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பு உள்ளன.

விஜய் டிவி:

விஜய் டிவியில் தீபாவளி ஸ்பெஷல் ஆக போர் தொழில், பிச்சைக்காரன் 2 ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.ல்;

கலைஞர் டிவி:

அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

சன் டிவி:

சன் டிவி தயாரித்து மிக பிரம்மாண்ட வெற்றி பெற்ற ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

ஜீ தமிழ்:

விஷால் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.