நாடு முழுவதும் வெகு விமர்சையாக ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும். அன்றைய தினத்தில் அனைவரும் புத்தாடை அணிந்து தீப ஒளி வழிபாடு போன்ற பல விஷயங்களில் தீபாவளிக்கான பாரம்பரிய விஷயங்களை பின்பற்றி வருகிறார்கள். அதில் தீபாவளி தினத்தில் முக்கியமானதாக இருப்பது பட்டாசு வெடிப்பது தான். தீபாவளி அன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசு வெடிக்க விரும்புவார்கள். ஆன்மீக காரணமாக காமம், குரோதம், கோபம், மோகம், மாச்சறியங்கள் போன்ற தீய குணங்கள் இறைவனின் திருநாமங்களால் தூள் தூளாக்க வேண்டும் .

இதனை குறிப்பதற்காக தீபாவளி அன்று பட்டாசு வெடித்து மகிழ்கின்றோம். மேலும் பட்டாசு என்பது வெடித்து சிதறும் தன்மை உடையது. ஒரு மனிதன் கோபம் மற்றும் ஆக்ரோஷம் போன்ற விஷயங்களில் இருந்து வெடித்து வெளியேற வேண்டும்.நாம் நம்முடைய உணர்வுகளை மற்றும் ஆசைகளை அடக்கி வைத்தால் அது ஒரு நாள் அதற்குரிய எல்லையை அடையும். எனவே அந்த சமயத்தில் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்.பண்டைய காலத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு உளவியல் பயிற்சியாகவே இந்த பட்டாசு வெடிக்கும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியதாக கூறப்படுகிறது.