ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் இந்த வருடம் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொதுவாகவே தீபாவளி என்றால் அனைவர் நினைவுக்கும் வருவது முதலில் பட்டாசுகள் தான். இந்த பட்டாசுகள் சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தயாரிக்கப்படுகின்றது.

ஆனால் பட்டாசுகளால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதால் அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி தீபாவளி பண்டிகை என்ற இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தீபாவளி என்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைப் போலவே மற்ற மாநிலங்களிலும் பட்டாசு வெடிக்க அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.