நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை ஒருநாள் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஆனால் தீபாவளியை ஐந்து நாள் விழாவாக தந்தேரஸ் என்ற பெயரில் வட இந்தியாவில் கொண்டாடுகின்றனர். தீபாவளியின் முதல் நாளை தான் தந்தேரஸ் என்று அழைக்கிறார்கள். ஆயுர்வேதத்தின் கடவுள் என போற்றப்படும் தந்வந்தரியை வழிபட வேண்டிய நாள் தான் இது.

இதனால் நோய்களிலிருந்து விடுபட முடியும். இந்த வழிபாட்டின் அடையாளமாக தான் தென் தமிழகத்தில் தீபாவளிக்கு முதல் நாள் மருந்து அல்லது தீபாவளி லேகியம் செய்து கொடுக்கும் முறை உருவானது. தீபாவளி மற்றும் தந்தேரஸ் தினத்தன்று கட்டாயம் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும். தங்கம் வாங்கிய அல்லது வீட்டில் உள்ள தங்கத்தை வைத்து வழிபடலாம். தீபாவளிக்கு முதல் நாள் தீபம் ஏற்ற வேண்டும் என்பது போன்ற சிலவற்றை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். விளக்குகளில் லட்சுமிதேவி வாசம் செய்வதால் விளக்குகள் ஏற்றினால் லட்சுமியின் அருள் கிடைக்கும் எனப்படுகிறது.