பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் கற்பகம் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அந்த வழியாக ஆபத்தான முறையில் வாகனத்தில் பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றி சென்றது தெரியவந்தது.

இதனால் மாவட்ட ஆட்சியர் வாகனத்தை வழிமறித்து ஓட்டுநரிடம் ஏன் குழந்தைகளை இப்படி அழைத்து செல்கிறீர்கள் என விசாரித்தார். அதற்கு ஓட்டுனர் தழுதாழை பகுதியைச் சேர்ந்த மாணவர்களை அன்னமங்கலம் பகுதியில் இருக்கும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதி முடிந்ததும் வீடுகளுக்கு அழைத்து செல்வதாக டிரைவர் தெரிவித்தார்.

உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் ஆபத்தான முறையில் மாணவர்கள் இப்படி அழைத்துச் செல்லக்கூடாது என மாவட்ட ஆட்சியர் ஓட்டுநரை கண்டித்தார். அதன் பிறகு மாணவர்களுக்கு மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து பாதுகாப்பாக அழைத்துச் சொல்லுமாறு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.