திமுக நடத்தும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய  DMK சட்டமன்ற உறுப்பினர் எழிலன், நீட் தேர்வு தகுதியை உருவாக்கவில்லை. MCQ முறையை உருவாக்கி கொண்டு இருக்கின்றார்கள். தனியார் மருத்துவ கல்லூரி என்ன பண்றாங்க ?  செந்தில் வேல் ஜீரோ என சொன்னாரு…  ஜீரோ இல்ல மைனஸ் 44%. சிஸ்டம் கிடையாது பர்சன்டெஜ் சிஸ்டம் 0 கிடையாது…

மைனஸ் 44 வாங்குனா கூட நீ டாக்டர்  ஆகலாம் என சொல்லுறது தான்  தகுதி உள்ள நீட். இது தகுதியான தேர்வா ? மெரிட்டா ? பப்ளிக் சிஸ்டத்துக்கு ஹெல்ப் பண்ணுதா ? ஒன்னும் கிடையாது….  நாம் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு உருவாக்கிய  கட்டமைப்பை ஒழிக்கிறது.

அப்ப இளைஞரணி செயலாளர்… மாண்புமிகு அமைச்சர் அவர்கள்  முதல் பேச்சில் யார் யாரெல்லாம் நீட்டால் பாதிக்கப்பட்டார்கள் என வருசைப்படுத்துறாரு….இங்க இருக்கக்கூடிய சுகாதார கட்டமைப்பு பாதிப்பாகுது…இங்க இருக்கின்ற மருத்துவ கட்டமைப்பு பாதிப்பாகுது… இங்க இருக்கின்ற கல்விமுறை பாதிப்பாகுது…. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல….  இந்தியாவுக்கே வழிகாட்டியாக களம் அமைக்கிறார்,  அறப்போராட்டம் அமைக்கிறார்….

அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டத்தில் கல்வியும், சுகாதாரமும் எப்படி  மாநில பட்டியலில் இருந்தால் ஒன்றிய அரசின் தலையீடு இருக்காது….  கல்வி,  சுகாதாரம் பொது பட்டியலில் இருப்பதால் தான்,  சட்டங்கள்  நிறைவேற்றி அவங்க என்ன பண்றாங்க ? இங்கு இருக்கின்ற கள நிலவரம் தெரியாமல்… மெடிக்கல் எஜுகேஷன் சிஸ்டம் பற்றிய ரியாலிட்டி தெரியாம…..நாம் கஷ்டப்பட்டு, பாதுகாக்கப்பட்ட மெடிக்கல் கட்டமைப்பை தகர்கின்றார்கள் என தெரிவித்தார்.