நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த வருடம் வெளியாகிய விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய 3 படங்கள் நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்றது. இந்நிலையில் கார்த்தி தனது 25-வது திரைப்படமான ஜப்பான் படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார்.
அதனை தொடர்ந்து முதல் முறையாக கார்த்தி டைரக்டர் நலன் குமாரசாமி இயக்கத்தில் புது படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மார்ச் மாதம் முதல் வாரத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.