தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்த துணிவு படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு ஏகே 62 திரைப்படத்தில் நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கதை திருப்திகரமானதாக இல்லாததால் விக்னேஷ் சிவனை படத்தில் இருந்து நீக்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஏகே 62 குறித்த தகவல்களை தன்னுடைய வலைதள பக்கத்தில் இருந்து நீக்கினார்.

அதன் பிறகு ஏகே 62 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக இருந்த நிலையில் அவரும் படத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் அவருக்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் கமிட்டானதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில் ஏகே 62 திரைப்படத்தின் பூஜை நேற்று அஜித் அலுவலகத்தில் வைத்து சிம்பிளான முறையில் நடைபெற்றதாக தற்போது புதிய தகவல் வந்துள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருந்த போது ஏகே 62 என்ற தலைப்பு பயன்படுத்தப் பட்டதால் தற்போது மீண்டும் அந்த தலைப்பை லைக்கா நிறுவனம் பயன்படுத்த விரும்பாததன் காரணமாக தான் பூஜை குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது. அதன் பிறகு மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் ஏகே 62 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஏகே 62 திரைப்படத்தை மகிழ்திருமேனி தான் இயக்குகிறார் என்ற தகவலும் தற்போது உறுதியாகி உள்ளது. ஆனால் வில்லன் மற்றும் ஹீரோயின் போன்றவர்களை படக்குழு இன்னும் தேர்வு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.