லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தின் சூட்டிங் இப்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. இப்படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த் போன்றோர் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர். அதோடு பிக்பாஸ் பிரபலம் அபிராமி வெங்கடாச்சலமும் ஒரு கேரக்டரில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் பிப்,.18 ஆம் தேதி சிவராத்திரியை முன்னிட்டு ஆந்திராவிலுள்ள காளகஸ்தி கோவிலுக்கு அபிராமி வெங்கடாச்சலம் சென்றுள்ளார். முன்பாக இவர் வசிக்கும் தெருவில் மேளதாளம் முழங்க ஆட்டம் ஆடி இருக்கிறார் அபிராமி வெங்கடாச்சலம். இதுபற்றி அபிராமி வெங்கடாச்சலம் தன் இணையபக்கத்தில் “தென்னாட்டுடைய சிவனை தரிசனம் செய்துவிட்டு இங்கிருந்து அப்படியே காஷ்மீர் சென்று லியோ சூட்டிங்கில் பங்கேற்கப்போகிறேன் என்பதை ஒரு வீடியோ வாயிலாக தெரிவித்து இருக்கிறார்.