தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர். இவர் தற்போது தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் மற்றும் தமிழில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 போன்ற படங்களை இயக்கி வருகிறார். இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இயக்குனர் சங்கர் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கேம் சேஞ்சர் படத்தின் சூட்டிங் முழுமையாக முடிவடைந்து விட்டதாகவும் இனி இந்தியன் 2 படத்தில் கவனம் செலுத்த இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த தகவல் கமல்ஹாசன் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது