தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினி வெறும் ஐந்து ரூபாய் மட்டும் வாங்கிக் கொண்டு பாரதிராஜா இயக்கத்தில் நடித்ததாக தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது நடிகர் ரஜினி 16 வயதினிலே திரைப்படத்தில் நடித்த பிறகு கொடி பறக்குது என்ற திரைப்படத்தில் நடிக்க இருந்தார். இந்த படத்தை முதலில் வேறொரு இயக்குனர் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் நடிகர் ரஜினி பாரதிராஜா இயக்கினால் தான் படத்தில் நடிப்பேன் என்று கூறிவிட்டார். இதனால் பாரதிராஜா படத்தை இயக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
அப்போது நீங்கள் கேட்கும் 30 லட்சம் பணத்தை என்னால் கொடுக்க முடியுமான்னு தெரியவில்லை ரஜினியிடம் பாரதிராஜா கூறியுள்ளார். அதற்கு பாரதிராஜாவின் பையில் இருந்து வெறும் ஐந்து ரூபாயில் மட்டும் எடுத்துக் கொண்ட ரஜினி படம் முடிந்த பிறகு மீதி பணத்தை வாங்கிக் கொள்கிறேன் என கூறிவிட்டாராம். அதன் பிறகு கொடி பறக்குது திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு பாரதிராஜா 30 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு ரஜினியின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் ரஜினி 20 லட்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மீதி 10 லட்சத்தை பாரதிராஜாவிடமே திருப்பிக் கொடுத்து விட்டாராம். மேலும் இந்த தகவலை இயக்குனர் பாரதிராஜாவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.