தமிழ் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ஹீரோவாக அறிமுகமான கவின் நடிப்பில் அண்மையில் டாடா திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கவின் தன்னுடைய அடுத்த படத்தில் சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி ஒரு கோடி ரூபாய் சம்பளமாக பெற்று வந்த நடிகர் கவின் தற்போது 2 கோடி ரூபாயாக சம்பளத்தை உயர்த்தி விட்டாராம். இதனால் ஒரு புதிய படத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு நடிகர் கவினை கமிட் செய்த தயாரிப்பு நிறுவனம் தற்போது படத்தில் இருந்து பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஒரே ஒரு படம் ஹிட்டானதும் இப்படி கவின் மாறிவிட்டாரே என பலரும் விமர்சனம் செய்கிறார்கள்.