தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜயை வைத்து தெறி, மெர்சல் பிகில் என அடுத்தடுத்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார். தற்போது அட்லீ பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் செப்டம்பர் 7-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இயக்குனர் அட்லீயின் மனைவி பிரியாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு மீர் என்று பெயர் வைத்துள்ளனர்.
நடிகர் ஷாருக்கானின் தந்தையின் பெயர் மீர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் அட்லி மும்பையில் 37 கோடி செலவில் புதிதாக வீடு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜவான் படம் வெற்றி அடைந்தால் அடுத்தடுத்து பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவியும் என்பதால் இனி மும்பையில் செட்டிலாக அட்லி முடிவு செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் மகன் பிறந்து அதிர்ஷ்டத்தில் நடிகர் அட்லி புதிதாக வீடு வாங்கியுள்ளார் என அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.