ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், 1972ல இருந்து 12 முறை சிறை சென்று இருக்கிறேன். சிறைக்கு போனா ஒரு குவளை தருவான்… ஒரு அலுமினிய தட்டு தருவான்… அதுல தான் எல்லா வேலையும் செய்யணும். அந்த குவளையில் தான் தண்ணீர் குடிக்கணும். அந்த குவளையில் தான் மோர் தருவான். அந்த குவளையில் தான் சாம்பார் தருவான்.

கால் கழுவுறது அந்த குவளையில் தான். எடப்பாடி பழனிசாமி அவர்களே….  நீ உண்மையான தியாகியா இருந்தா? நீ சிறை சென்று அந்த குவளைல…  நீ கால் கழுவுன குவளைல தண்ணி குடிக்க வேணாம். உன் வீட்டுல பாத்ரூம்ல இருக்குற குவளைல  தண்ணி குடிச்சா? நான் உன்ன தியாகினு ஒத்துகிறேன். அதுக்கு தகுதியானவனா ? நீ தியாகின்னு பட்டம் கட்டிகிட்டு… 

இங்க இருக்குறவன ஏமாத்துற வேலையெல்லாம் செய்யுற.  இன்னும் இயக்க தொண்டர்கள் ஏமாற மாட்டார்கள்,   விழித்துக்கொள்வார்கள்.. சாதாரண தொண்டர்களுக்காக தான் இந்த இயக்கம் என்று போராடுகின்ற ஒரு தலைமை இங்கே அமர்ந்திருக்கிறோம். 10 மாவட்ட செயலாளர்கள் முன் மொழியனும், 10 மாவட்ட செயலாளர் வழி மொழியனும்.  5 வருஷம் தலைமை கழகத்தின் அனுபவம் வேணும்.  அவங்க தான் இந்த இயக்கத்தை வழி நடத்தணும்.

உடனே அடுத்து யாருனு லைன்ல நிக்கிறாங்க.. ரெண்டு பெல்லு இருக்கு…  பலகோடிகளை வழங்கி,  கழகத்தினுடைய பொது செயலாளர் ஆகிடலாம்னு நட்பாசைல இருக்குறான்.. ஆனா ரெண்டு கோடி தொண்டர்களும்,  உங்கள பிச்சி பிச்சி நார்நாரா கிழிச்சி எரிஞ்சிடுவோம் என்பதை தெரிவித்து கொண்டு, இந்த மாதிரி தமிழக லெவல்ல… இயக்கத்தினுடைய கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டத்துல நான் இது வரைக்கும் பேசுனது இல்ல…

லோக்கல் பேசி பேசி தான் வந்து பழக்கம். இந்த மாதிரி  வாழ்க்கையிலேயே சிறப்பான வாய்ப்பினை எனக்கு வழங்கி….  மேடையிலே அமர்ந்து இருக்கின்ற அத்துணை கழக முன்னோடி பெரு மக்களுக்கும் மனமார்ந்த நெஞ்சார்ந்த நன்றியை… அவருடைய பாதம் தொட்டு வணங்கி தெரிவித்து கொள்கிறேன் என பேசினார்.