எந்த திட்டத்தையும் முறையாக செயல்படுத்தினால்தான் அதனால் பயனடைந்தவர்கள் பாராட்டி பேசுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் மற்றும் முதல்வர் காலை உணவு திட்டம், மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம், இளைஞர்களுக்கான நான் முதல்வன் திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் உள்ளிட்டவை தமிழக அரசின் ஐந்து முக்கிய திட்டங்கள் என்றும் கூறி முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.