செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  நான் ஏதாவது கெட்ட வார்த்தை சொன்னேனா ? நான் கெட்ட வார்த்தை பயன்படுத்தினேனா ? நான் சொல்றது பற்றி  உங்ககிட்ட கேட்கிறேன். நான் ஏதாவது கெட்ட வார்த்தை சொன்னா ? மரியாதைக்குரிய நிதியமைச்சர் கிட்ட,  மீண்டும் மரியாதையாக நான் கேட்பது….  என்னுடைய சொந்த செலவுக்காக நான் கேட்கல,  தமிழ்நாட்டு மக்களுக்காக…

இந்த கடும் பேரிடர்….  இதைப் பேரிடர்னு ஒத்துக்க மாட்டேங்கிறாங்க….. அதைக் கூட ஒரு சோசியல் மீடியாவில் ஒரு நண்பர் பதிவிட்டு இருந்தாரு. ஒன்பது வருட ஆட்சியிலே மிகப்பெரிய பேரிடர் என்பதால் இதை ஒரு தனியாக ஒரு பெரிய பேரிடராக பார்க்க மாட்டோம்  அப்படின்னு சொல்லிட்டாரு அவரு சொன்னாங்க. இதை தயவு செய்து தமிழ்நாட்டு மக்கள் உணர வேண்டும்.

ஒன்றிய குழு அமைச்சாங்க…. அவங்க வந்து எல்லாத்தையும் ஆராய்ந்து,  மிகப்பெரிய ஒரு இழப்பு ஏற்பட்டிருக்கு. அரசு சிறப்பாக செயல்பட்டு இருக்குன்னு சொல்லிட்டு போறாங்க. ஆனா இவங்க டோட்டலா இதை  அரசியலாக முயற்சிக்கிறாங்க. நான் யாரையும் மரியாதை குறைவா பேசினேன்னு நான் நினைக்கல. நான் நேற்று கூட மீண்டும் திரும்ப பதில் அளித்து இருந்தேன் என தெரிவித்தார்.