கிறிஸ்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான,  எடப்பாடி பழனிச்சாமி,  உலக வரலாற்றில் எவரும் செய்திடாத திட்டமாக மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கிறிஸ்தவ பெருமக்களின் புனித தலமான ஜெருசலேம் சென்று வர கிறிஸ்தவர்களுக்கு தமிழக அரசின் மூலம் நிதி உதவி அளிக்கப்பட்ட அரசாங்கம் அண்ணா  திமுக அரசாங்கம்.

ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டு காலத்தில் இதுவரை ஒரு கிறிஸ்தவர்களாவது இந்த விடியா திமுக அரசு ஜெருசலேம் புனித பயணத்திற்கு அனுப்பி வைத்துள்ளதா என்று எண்ணிப் பாருங்கள் ? இதுவரை எந்த கிறிஸ்துவ பெருமக்களும் ஜெருசலேம் புனித யாத்திரை பயணத்திற்கு செல்லவில்லை என்பதுதான் உண்மையான தகவல். கடந்த கால அம்மாவினுடைய ஆட்சியிலே ஜெருசலேம் புனித பயணத்திற்கு விமான கட்டணம் உயர்த்தப்பட்டது என்றும்,

எனவே ஜெருசலேம் பயணத்திற்கு வழங்கப்படும் மானிய தொகை உயர்த்த வேண்டும் என்று நான் இப்படிப்பட்ட ஒரு கிறிஸ்துமஸ் திருவிழாவிலே கலந்து கொண்டிருந்தபோது கோரிக்கை வைத்தார்கள். உடனடியாக அந்த கோரிக்கையை ஏற்று அங்கேயே நான் அறிவித்தேன்.   உடனடியாக ஜெருசலேம் புனித பயணம் செல்வதற்கு வழங்கப்பட்ட அரசு நிதி உதவி

ஒரு நபருக்கு 28,000 என்பதை 38 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கிய அரசு அண்ணா திமுக அரசு. அதுவும் அவர் வைத்து கோரிக்கை அதே நேரத்தில் நிறைவேற்றப்பட்ட அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம் அரசு மானியம் பெறும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களையும், பணியாளர்களையும் சுதந்திரமாக அந்தந்த கல்வி நிறுவனங்களே எந்தவித அரசியல் குறுக்கிடும்  இன்றி, நியமிக்கப்பட்டு வந்தனர் அண்ணா திமுக ஆட்சியில்…

ஆனால் இந்த விடியா திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றவுடன் அரசு மானியம் பெறும் கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களில் புதிதாக ஆசிரியையோ, ஆசிரியர்களோ, பணியாளர்களோ அரசியல் குறுக்கீடு  இன்றி நியமிக்க முடியவில்லை என்பதுதான் எதார்த்த உண்மை. இதை பல பேர் என்னிடத்தில் தெரிவித்திருக்கின்றார்கள்.  மேலும் இந்த விடியா திமுக அரசில், அரசு மானியம் பெறும்… கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பல புதிய நிறுவனங்கள் அரசு அனுமதி கிடைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அங்கே பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். அந்த கல்வி நிறுவனம் பாதிக்கப்படுகின்றது என்பதையும் இந்த நேரத்தில் குறிப்பிடுகின்றேன்.