தேசிய பேரிடர் மீட்பு குழு, ராணுவத்தினர் எல்லாம் ஒரு ரிப்போர்ட் பைல் பண்ணி இருக்காங்க. ஆனால் இதுவரைக்கும் இறப்பு விகிதம் சர்ச்சையாக சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, இல்லைங்க கணக்கு எடுத்துக்கிட்டு தான் இருக்காங்க.. சில பகுதிகளில் இன்னும் போய்,  சரியாக கணக்கு எடுக்க முடியாத சூழல் இருக்கு. அதனால் எடுத்து  இருக்கக்கூடியவர்களுக்கு நிவாரணமும் விரைவில் தரப்படும். அது மட்டும் இல்லாமல் தொடர்ந்து எல்லா பகுதிகளிலும் கணக்கெடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

அப்போது பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மருத்துவ முகாம் தொடர்ச்சியாக ஒரு வார காலம் இருக்கும். தனியார் மருத்துவ முகாம்கள் பொறுத்தவரை 5 நாட்கள் இருக்கும். ஏற்கனவே 17ஆம் தேதியிலிருந்து அரசு சார்பில் நடத்தக்கூடிய 206 மருத்துவ குழுக்கள்  தொடர்ச்சியாக இருக்கும்.

நடமாடும் மருத்துவ வாகனம்  அதுமட்டுமில்லாமல் மதுரை  மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து பிஜி டாக்டர் 50 பேர் வந்திருக்காங்க...  டாக்டரை பொறுத்த வரைக்கும் எங்க பாத்தாலும் இருக்குறாங்க…  உங்க நாலேஜுக்கு தெரிஞ்சு.. எங்களுக்கு தெரியாம கூட இருக்க வாய்ப்பு இருக்கு….  அந்த மாதிரி ஏதாவது இருந்தா ?  நீங்க  சொன்னீங்கன்னா…..  உடனடியா கேம்ப்க்கு அனுப்பி வைத்து விடுவோம்.

அரசு மருத்துவமனைக்கு OP இப்பவே முழுசா வர ஆரம்பிச்சிட்டாங்க…. ஸ்டார்ட் ஆயிடுச்சு… RO  பிளான்ட் தான்  சரியில்லாம இருந்தது. நேத்திக்கு போயிட்டு செக்ரட்டரி நைட்டு கூடவே இருந்து  RO பிளான்ட் எல்லாம் சரி பண்ணிட்டு வந்துட்டாங்க….  இன்னைல இருந்து அங்க டையாலிசிஸ் சர்வீசும் ஸ்டார்ட் ஆயிடும் என தெரிவித்தார்.