புதிய தமிழகம் கட்சி சார்பில் நடந்த 27ஆம் ஆண்டு தொடக்க முப்பெரும் விழாவில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகனும், புதிய தமிழகம் கட்சியின்  மாநில இளைஞர் அணி தலைவருமான ஷ்யாம் கிருஷ்ணசாமி, எல்லா சமூகத்தை விட இந்த சமூகத்தை குடிக்க வச்சு நாசமாக்கனும் என்பது ஒரு பெரிய சதி திட்டமாகவே இங்க போயிட்டு இருக்கு… இதற்கெல்லாம் கணக்கில்  கொண்டு தான் ஐயா அவர்கள் மீண்டும் மீண்டும் மதுவுக்கு எதிரான போராட்டம்…

மதுவுக்கு எதிரான மக்கள் பிரச்சாரம் என  எல்லாம் திரும்பத் திரும்ப செஞ்சுட்டு இருக்காங்க….  அதுபோல இப்ப நம்ம கடந்த ஒரு ஆண்டுகளாக மதுவுக்கு எதிராக பிரச்சாரம் பண்ணிட்டு இருக்கிறோம்.. அதற்கு முன்பு இந்து ஒற்றுமை மாநாடு என்று போட்டோம்….  தமிழர் ஒற்றுமை என்று பேசுகிறோம்…. தேசியம் என்று பேசி,  திடீரென்று ஏன் இப்போ தென் மாவட்ட படுகொலைகளை கையில் எடுக்கிறார் ? என்று சிலர் கேட்கலாம்…

வேற யார் எடுப்பா ? டாக்டர் ஐயா எடுக்காம வேற யார் எடுக்கிறது இந்த போராட்டத்தை ? கொலைகள் நடந்துகிட்டு தான் இருக்கு…டாக்டர் ஐயா எடுக்குறதுக்கு முன்னாடி வேற யாராவது பேச வந்தாங்களா ?  இன்னைக்கு வருவாங்க…. நம்ம  தலைவர் அவர்கள் போராட்டம் அறிவித்த பிறகு….

அதைப் பற்றி பேசிய பிறகு…. களவாணியை நேரடியாக பெயரை சொல்லி பேசிய பிறகு இன்னைக்கு எல்லாரும் பேச வருவாங்க.. ஆனால் அதற்கு முன்பு… ஆமாம்…  இந்து ஒற்றுமை தான் பேசினோம்….  இங்கு கொலை நடக்கிறது என்று எங்கள் மதத்தை நாங்கள் விட்டு விட முடியாது….  எங்கள் அடையாளத்தை விட்டு விட முடியாது…..  தேவேந்திரகுல வேளாளர் என்று தான் நாங்க இருக்க முடியும் என தெரிவித்தார்.