லியோ படத்தின் டயலாக் ரைட்டர் படத்தில் இன்னும் இயக்குனர்கள் உள்ளனர் என்பது போல் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

2023-இன் மிகப்பெரிய வெற்றி படம் இதுதான். என அசைக்க முடியாத நம்பிக்கையுடன் சொல்லும் அளவிற்கு பெரும் எதிர்பார்ப்பை  பெற்ற படம் தான் லியோ. அதற்கு முக்கிய காரணமாக கோலிவுட்-இன்  முகமாக திகழும் தளபதி விஜய் மற்றும் வெற்றி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் முக்கிய காரணிகளாக இருந்தாலும் கூட, படத்தில் பிற கதாபாத்திரங்களுக்கும் கோலிவுட், மோலிவுட் ,பாலிவுட்  என அனைத்திலும் உள்ள முக்கிய  பிரபலங்கள் நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

படத்திற்கான சூட்டிங் முடிவு நிலையை எட்டிய போதிலும், இந்த கதாபாத்திரங்களுக்கான தேர்வு  இன்னும் முடிவு நிலையை எட்டவில்லை. சமீபத்தில் கூட பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப்  படத்தில் ஒரு கேமியோ ரோல் பண்ண இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், நடிகர் தனுஷ் -ஐ லியோவில் நடிக்க பட குழு அணுகியதாக கூறப்படுகிறது. இது உண்மையா ? பொய்யா ? என்ற கேள்வி தொடர்ந்து சமூக வலைதளங்களில் வலம் வந்த நிலையில், அதற்கான பதிலை லியோ படத்தின் டயலாக் ரைட்டர் ரத்ன குமார் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம்  அளித்துள்ளார். அதில்,

புகைப்படம் ஒன்றில் லியோ படம் இயக்குனர்களுக்கான பார்ட்டி என பதிவிட்டு அதில், மிஷ்கின் , அனுராக் காஷ்யப், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்த நிலையில், லிஸ்டில் இன்னும் இயக்குனர்கள் உள்ளார்கள் என்பது போல அவர் ஸ்டோரி பதிவிட்டு இருந்தார். இதை ரசிகர்கள் D Code  செய்ததில்  தனுஷ் அவர்களும் இயக்குனர் தான். ஆகவே, அவர் படத்தில் கண்டிப்பாக இருக்க வாய்ப்புள்ளதாக முடிவே செய்து விட்டார்கள்.

படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை எனினும், படத்தில் பணியாற்றக்கூடிய கலைஞர்களால் வெளியிடப்படக்கூடிய சின்ன சின்ன தகவல்கள் படத்தின் மீதான ஆர்வத்தை சிறிதும் குறைய  விடாமல் ஒவ்வொரு நாளும் அதிகரித்துச் செல்கின்றது..